இந்த விஷயங்கள் தான் உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க காரணம் என்று தெரியுமா?

சமீப காலமாக உங்கள் வீட்டில் செலவு அதிகமாக உள்ளதா? எவ்வளவு சம்பாதித்தாலும், வீட்டில் பணம் நிலைப்பதே இல்லையா? அப்படியெனில், உங்கள் வீட்டில் பணத்தை தங்கவிடாமல் செய்யும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம். சரி, இப்போது வீட்டில் செலவை அதிகரிக்கும் அந்த விஷயங்கள் எவையென்று பார்ப்போம்.

வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் செலவு அதிகரிப்பதோடு, வருமானமும் குறைவாகவே இருக்கும்.

வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதேனும் விரிசல் விட்டிருந்தால், அதை உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் இவைகள் வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட அல்லது உடைந்த சிலைகளை வீட்டினுள் வைத்திருந்தால், அதுவும் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள தெய்வங்களின் போட்டோக்கள் கிழிந்திருந்தால், அதையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

முட் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்கக்கூடாது. இது பணப் பிரச்சனையை வீட்டில் உண்டாக்கும். ஆகவே இந்த மாதிரியான செடிகளை வீட்டின் வெளியே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், அவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நுழையச் செய்து, பணப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

வீட்டில் செயல்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விட்டிருந்தல், அதை உடனடியாக சரிசெய்யுங்கள் அல்லது வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால், செயல்படாத கடிகாரமானது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கும்.

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *