இந்த தானியங்களை கொண்டு சிவனை வணங்கினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்!!

இந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர்தான் சிவபெருமான். அழிக்கும் கடவுளான சிவனை ருத்ரமூர்த்தியாகவே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் உண்மையில் சிவபெருமான் தன் பக்தர்களுக்கு சாந்த மூர்த்தியாக இருந்து அருளை வழங்குபவர். நல்லவர்களா, கெட்டவர்களோ தன்னை முழுமையாக சரண்டைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை வழங்குபவர். இதற்கு நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பல உதாரணங்கள் உள்ளது.

சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும். அந்த வகையில் சில தானியங்களை கொண்டு ஈசனை வழிபட்டால் அவருக்கு உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவார். இந்த பதிவில் எந்தெந்த தானியங்களை கொண்டு சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

திங்கள் வழிபாடு
திங்கள் கிழமை சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமானது. திங்கள் கிழமையன்று சிவலிங்கத்தை குளிர்ந்த பால், வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு வழிபடுவது சிவெபருமானை அதிகம் மகிழ்விக்க கூடியதாகும்.

வேதங்களின் படி தானியங்களின் முக்கியத்துவம்
இந்த தானியங்கள் ஒவ்வொன்றும் வேதங்களில் குறிப்பிடதக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. புராண கால முனிவர்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு தானியமும் சிவபெருமானை எப்படி சரணாகதி அடைகிறது என்று கூறி இருக்கிறார்கள். எந்தெந்த தானியங்கள் புனிதமான முக்கியத்துவம் கொண்டது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பார்லி
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும், துயரங்களையும் எதிர்கொள்பவராய் இருந்தால் நீங்கள் சிவபெருமானை பார்லி தானியத்தை கொண்டு வழிபடவேண்டும். இது சிவபெருமானின் அருளை பெற்றுத்தருவதோடு மட்டுமின்றி இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை அதிகரித்து நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தரும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தீயசக்திகளையும் விரட்டும்.

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *