நம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா? – Tamil Viral News

நம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. மேலும் பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான்.

பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்

பல்லி விழும் பலன்கள்

தலை

பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது.

இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம்.

நெற்றி

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி மற்றும் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் என அர்த்தம்.

முடி

தலையில் விழுவதற்கு பதிலாக தலையில் உள்ள முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.

முகம்

முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.

மேலும் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

இடது கை அல்லது இடது கால்

இடது கை அல்லது இடது காலில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.

பாதம்

பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.

தொப்புள்

பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.

தொடை

பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.

மார்பு

இடது பக்கம் மார்பில் பல்லி விழுந்தால் சுகம் மற்றும் வலது பக்கம் மார்பில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.

கழுத்து

கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும் மேலும் வலது பக்கம் விழுந்தால் மற்றவருடன் பகை உண்டாகும்.

பரிகாரம்

பல்லி விழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.

பூஜை அறையில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம்.

அந்த பல்லிகளை தொடுவதால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *