நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவான்… நோய்கள் தீர வணங்க வேண்டிய தெய்வங்கள்!! – Tamil Viral News

நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவான்… நோய்கள் தீர வணங்க வேண்டிய தெய்வங்கள்!!

இன்றைக்கு புதுப்புது நோய்கள் மக்களை தாக்குகின்றன. நோய்களுக்கு மருத்துவ செலவு செய்தே பலர் கடனாளியாகின்றனர். மனக்கவலையாலும் பாதிக்கப்படுகின்றனர். நோய்கள் தீர இறைவனை நம்பிக்கையுடன் வணங்கினால் நோய்களில் இருந்து முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம்.

சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலே நோயின் அறிகுறி தெரிந்தாலே அவனது மனதில் தோன்றும் பயமே அந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது. எனவே மனதில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்து அதற்குரிய மருத்துவ சிகிச்சை யையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

நோய் வந்து விட்டதே என்று அச்சப்படாமல் அதற்குரிய கடவுள்களை வணங்குவதோடு மருத்துவமனைக்கு சென்று நம்பிக்கையுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் நோய்களில் இருந்து விடுபடலாம்.

தலைவலி, காய்ச்சல் – பிள்ளையார்

அனைத்து நோய்களும் தீர வணங்க வேண்டிய தெய்வங்கள் – ஸ்ரீதன்வந்தரி பகவான், தட்சிணா மூர்த்தி

புற்று நோய் – சிவபெருமான்

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், ஞாபகசக்தி குறைவு- மகாவிஷ்ணு

முடி நரைத்தல், உதிர்தல் – மகாலட்சுமி, வள்ளி தாயார்

கண் பார்வைக் கோளாறுகள் நீங்க – சூரிய பகவான், சிவன், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள் – முருகன்

மாரடைப்பு, இருதய கோளாறுகள் – சக்தி, கருமாரி, துர்க்கை

அம்மை நோய்கள் – மாரியம்மன் அஜீரணம் , குடல்வால், அல்சர் , மூலம் , மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா – தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு – முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி மூட்டுவலி, கால் வியாதிகள் நீங்க சக்கரத்தாழ்வாரை வணங்கலாம்.

பித்தம், வாத நோய்கள்,எலும்பு வியாதிகள் தீர – முருகன், சனிபகவான், சிவபெருமான்

வாயுக் கோளாறுகள் நீங்க வாயு புத்திரன் ஆஞ்சநேயரை வணங்கலாம்.

ரத்தசோகை, ரத்த அழுத்தம் தீர வணங்க வேண்டிய தெய்வம் – முருகன், செவ்வாய் பகவான்

குஷ்டம், சொறி சிரங்கு – சங்கர நாராயணன்

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *