தலைவிரி கோலமாக அலையும் பெண்களா நீங்கள்..? அவசியம் இத முதல்ல படிங்க..!! – Tamil Viral News

தலைவிரி கோலமாக அலையும் பெண்களா நீங்கள்..? அவசியம் இத முதல்ல படிங்க..!!

எந்த விசேசம் என்றாலும் அழகு நிலையத்திற்குச் சென்று, ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து அழகழகாய் வலம்வரும் பெண்களைப்பார்க்கையில், அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது..

பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் …
ஆம், தலைவிரி கோலமாய் காட்சி தரும் பெண்களுக்கு இலட்சுமி கடாட்சம் கிடைக்காது, இலட்சுமி இல்லாத இடத்தில் மூதேவி தங்குவாள் என்ற பிரபஞ்ச நியதிக்கேற்ப மூதேவி தங்குவாள். அது மட்டுமல்ல தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டால் சனிக்கு பிடிக்கும். ஆக சனி பகவான் பிடித்து கொள்வார்.
வெளிநாட்டுப் பெண்கள் குளிருக்காக தலைவிரிப்பார்களாம், ஆனால் நம்மவர்கள் அதை ஏதோ அழகு என்று நினைத்து செய்யும் செயல் அவர்களை ஏளனமாகப் பார்க்கத் தோன்றும்.

சமைக்கும்போதும், பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் தலைவிரி கோலத்தை தவிர்க்க கோருகிறது அர்த்தமுள்ள இந்து கலாசாரம்.
சகுன பலனின் படி தலைவிரி கோலமாய் வரும் பெண்ணை கனவிலோ, நேரிலோ காண்பதும் அசுபம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆலயங்களுக்கு தலைவிரிகோலமாக செல்லும் போது தலைமுடி ஒன்று ஒரு ஆலயபிரகாரத்துக்குள் விழுந்தால் கூட பாவம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணகி தன் தலைவனை இழந்து தலைவிரி கூந்தலுடன் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள். தன் கற்பின் சிறப்பால் பாண்டிய மன்னனுக்கும் நாட்டிற்கும் தண்டனை கொடுத்தாள்.

இன்று தலைவிரி கோலத்துடன் திரியும் பெண்களுக்கு என்ன தெய்வ சித்து இருக்கோ தெரியவில்லை .
இன்று கண்ணகி, இருந்தால் முதலில் இவ்வாறு அமங்கலமாக செல்லும் பெண்களைத்தான் முதலில் தன் கற்பின் சிறப்பால் தண்டணை கொடுத்திருப்பாள் அல்லது இப்பெண்களின் கணவன்மார்களுக்கு தண்டணை கொடுத்திருப்பாள் என்று தோன்றுகிறது.

மனைவியானவள் தலைமுடியை விரித்துக் கொண்டு கணவனை வழி அனுப்பக் கூடாது.ஈரத் தலையாக இருந்தாலும் கூந்தலின் நுனியில் ஒரு சிறு முடியாவது போட வேண்டும். இவை அந்த காலத்தைய வழக்கமாகும்.
தலைவிரி கோலத்தை முடிந்தவரை தவிருங்கள். எல்லாவற்றிற்கும் ஏதோவொரு வகையில் நல்லதை தொட்டுச் சென்றிருக்கின்றீர்கள் நம் முன்னோர்கள்

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *