இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகுமாம்…!! – Tamil Viral News

இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகுமாம்…!!

நீரின்றி அமையாது உலகு என்பதால் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா?

அதேபோல உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் ஏன்?

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது.

இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது.

எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளாங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *