வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி, செல்வம் பெருக… இதை செய்தால் நிச்சயம் பலன் உண்டு..! – Tamil Viral News

வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி, செல்வம் பெருக… இதை செய்தால் நிச்சயம் பலன் உண்டு..!

இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். விளக்கில் வசிக்கும் லட்சுமி வீட்டில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனைத்தரும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும். நான்கு முகம் ஏற்றினால் மாடு, கன்று என்று கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்துமுகம் ஏற்றினால் எட்டுவிதமான செல்வச்செழிப்பும் பெருகும்.

தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள். பணக்கஷ்டம் தீர தேவாரம் தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள ஸ்தலங்களில் ஒன்றான திருவாடுதுறை சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி அளித்த தலம் ஆகும். திருவாடுதுறை சென்று கோமுக்தீஸ்வரரை முறைப்படி வணங்குங்கள் செல்வம் சேரும்.

சிதம்பரம் நடராஜரை தரிசியுங்கள், தேவாரத்தை வீட்டில் பாராயணம் செய்யுங்கள் செல்வம் பெருகும். சக்தித் தலங்களிலும் உள்ள சக்தியுடன் உள்ள கணபதியை வழிபட்டால் வெற்றிகள் குவியும், செல்வம் செழிக்கும். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள போககணபதியை வணங்கினால் எல்லாவகையான செல்வங்களும் சேரும்.

வெள்ளிக்கிழமை ராகுகாலபூஜை 15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *