பிரியங்கா சோப்ராவுக்கு பெட்ரூம்ல அவர் கணவர் போட்ட கட்டளைகள் தெரியுமா ? – Tamil Viral News

பிரியங்கா சோப்ராவுக்கு பெட்ரூம்ல அவர் கணவர் போட்ட கட்டளைகள் தெரியுமா ?

பிரியங்கா சோப்ரா அவரைப் பற்றி பொது வெளிகளில் நடந்து கொள்ளும் எல்லா காரியங்களும் நமக்குத் தெரிந்ததே. எப்போதும் தன்னைப் பரபரப்பாகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகும்படி சர்ச்சைகளையும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டே இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. அதேபோல் மிகவும் திறமையான நடிகை என்பதும் உலக அழகி பட்டம் பெற்றவர் என்பதும் நமக்குத் தெரியும்.

பிரமாண்ட திருமணம் :

 

பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் மிக பிரமாண்டமான ராயலாக ஜோத்பூர் நகரில் திருமணம் நடந்தது. அதோடு டெல்லியில் தங்களுடைய குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்ளை மட்டும் அழைத்து ஒரு வரவேற்பு (ரிசப்ஷன்) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மும்பை ரிசப்ஷன் : தங்களுடைய பாலிவுட் துறையில் உள்ள சக நடிகர், நடிகைகளுக்குப் பார்ட்டி கொடுக்க வேண்டாமா? அதற்காகவே பிரத்யேகமான பாலிவுட் பிரபலங்களுக்காகவே மும்பையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஹனிமூன் : மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாகவே தங்களுடைய ஹனிமூனை சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வந்தனர். பிரியங்கா – நிக் ரெண்டு பேரும் மிக அழகான பார்ப்பதற்கே மிகவும் ரசிக்கும்படியான ஜோடி தான். அவர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை இனிதே தொடங்கினார்கள்.

ரூல்ஸ் – அனுசரித்து போதல் : இருவருக்குமான குடும்ப வாழ்க்கை இனிமையாக தொடங்கியது. தங்களுடைய வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளையுமு் சில முக்கியமான விஷயங்களில் அனுசரித்துப் போவதும் தான் நம்முடைய அன்பை அதிகரிக்கும் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் நிக் தன்னுடைய மனைவி பிரியங்காவிடம் சில ரூல்ஸ்களையும் போட்டிருக்கிறார்கள். அவற்றை பிரியங்காவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ரூல்ஸ் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

செல்லுக்கு தடா : இருவரும் பெட்ரூமில் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்பது தான் இந்த ரூல்ஸ். ஏன். செல்போனை பெட்ரூமுக்கு எடுத்துக் கொண்டே வரக்கூடாதாம். இருவருமே இந்த ரூல்ஸ்ஸை மதிப்பு நடப்பதற்கு ஒப்புக் கொண்டதாக பிரியங்காவே தெரிவித்திருக்கிறார்.
உண்மையைச் சொல்லப் போனால் பிரியங்கா ஒரு செல்போன் பைத்தியமாம். எப்போதும் பேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டர் என்று தன்னுடைய போனிலும் சோசியல் மீடியாக்களிலும் தான் தன்னுடைய முழு பொழுதையும் கழித்துக் கொண்டிருப்பாராம்.
நல்ல புரிதல் : நிக் பிரியங்காவை போனை பெட்ரூமுக்குள் கொண்டு வரவே கூடாது என்று கறாராகச் சொல்லியிருக்கிறார். அதை பிரியங்காவும் பின்பற்றியிருக்கிறார். அதன் பிறகு தான் இருவருமே புரிந்திருக்கிறார்கள் செல்போன் என்பது உறவுகளுக்கு இடையே எப்படி இடைவெளியை ஏற்படுத்துகிறது என்று. உண்மையிலேயே நல்ல ரூல்ஸ் தாங்க. நல்லாவே புரிஞ்சிக்கிட்டாங்க ரெண்டு பேரும். இதனால் இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதற்கான நேரம் நிறையவே கிடைத்திருக்கிறது.

காதலுக்கு வயதில்லை :

இருவரும் தங்களுக்குள் மிக நெருக்கமாகவும் அன்பாகவுமே இருந்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் இருவருடைய வயது வித்தியாசம் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கத் தொடங்கவே காதல் தான் வாழ்க்கையின் எல்லாவற்றுக்கும் முக்கியம், வயதல்ல என்பதை உணர்த்த விரும்பினார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கை இனிதாக அமைய எந்த தியாகத்தையும் இருவரும் செய்யத் தயாராகவே இருந்தார்கள். அப்புறமென்ன? நல்ல ரூல்ஸ் யார் சொன்னா என்ன? எல்லோரும் இத பாலோ பண்ணலாமே? இது கல்யாணம் ஆனவங்க மட்டும்தான் பண்ணணும்னு அவசியம் இல்ல. எல்லோருக்குமே இது நல்லது தானே.!

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *