இவ்வளவு அழகாயிருந்தும் தனிமரமாக இருக்கும் நடிகைகளைப்பற்றித்தெரியுமா…. – Tamil Viral News

இவ்வளவு அழகாயிருந்தும் தனிமரமாக இருக்கும் நடிகைகளைப்பற்றித்தெரியுமா….

சினிமாத்துறையிலும் தங்கள் வயதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிமரமாக முரட்டு சிங்கிளாக இருந்து சாதிக்கும் அழகான பெண்கள் பற்றிய தொகுப்பு இது.
வயது என்பது வெறும் நம்பர்தானே. அதையெல்லாம் மீறி தங்களுடைய துறையில் பல மைல்கல்களைத் தாண்டி சாதனைகளை நிகழ்த்துவார்கள். அது ஆணாக இருக்கிற போது வேறாகவும் பெண்ணாக இருக்கும்போது வேறாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி தான் சில பெண்கள் சாதித்துக் காட்டுகிறார்கள்.
அப்படி உங்களுக்கு மிகவும் பிடித்த, மிக அழகாக இருந்தும் தங்கள் வாழ்க்கையில் திருமணத்தை இரண்டாம் பட்சமாக வைத்துக்கொண்டு, தங்கள் துறையில் போராடி முன்னேறும் அழகிய ஏஞ்சல்கள் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ரகுல் ப்ரீத்தி சிங் (Rakul preet singh) :


1990 இல் பிறந்த இவருக்கு இப்போது 29 வயதாகிவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய முதல் தமிழ்ப்படம் தடையறத் தாக்க. அதன்பிறகு என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தற்போது திருமணம் செய்து கொள்வதில் விருப்பமே இல்லையாம். இன்னும் சினிமாவில் நிறைய சாதிக்கணுமாம்.

அனுஷ்கா ஷெட்டி (Anushka shetty) :


அனுஷ்கா ஷெட்டி தமிழ் சினிமாவில் நுழைந்த புதிதில் நிறைய ஆண்களுக்கு கனவுக் கன்னியாகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அது அவருடைய வயது வெளியி்ல தெரியும் வரை. அவருடைய வயது தெரிந்ததும் எல்லோரும் ஷாக் ஆனார்கள். இவ்வளவு வயசுப் பெண் மாதிரியே தெரியலையே என்று. அவருடைய இளமை ரகசியத்துக்கு முக்கியமான காரணம் அவருடைய யோகா தான். அவர் ஒரு யோகா டீச்சர். இவருக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணத்தில் நாட்டமே இல்லாமல் இருக்கிறார். பாகுபலியில் இவருடன் நடித்த பிரபாசுக்கும் இவருக்கும் காதல். விரைவில் திருமணம் என நிறைய கிசுகிசுக்கள் வந்த போதிலும் அதையெல்லாம் கொஞ்சம் சட்டை செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார் நம்ம அனுஷ்கா.

நயன்தாரா (Nayantara) :


இப்போதைக்கு குழந்தைகள், பெரிசுகள், இளைஞர்கள், பெண்கள் என் பாரபட்பமோ பாகபாடோ இல்லாமல் அத்தனை பேருக்குமான டார்லிங், ஆசை நாயகி யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு நயன்தாரா என்பார்கள். தமிழில் முதலில் ஐயா படத்தில் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டார், அஜித், விஜய் என எல்லா முதன்மை நடிகர்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய திறமையால் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கப்படுகிறார். இவரை எப்போது சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி, தற்போது 35 வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகுிற நவம்பரில் திருமணம் என்று சொல்லப்படுகிறது. அதையும்தான் பார்க்கலாமே.

காஜல் அகர்வால் (Kajal agarwal) :


காஜல் அகர்வாலுக்கு 34 வயதாகிவிட்டது. இன்னும் குழந்தை போல சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்ப என்ன செஞ்சுட்டோம் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்று சொல்கிறாராம். கல்யாணம் பத்தி இப்போதைக்கு யோசிக்கற ஐடியாவே காஜல்கிட்ட இல்லையாம்.

தமன்னா (Tamanaah) :

கல்லூரி படத்தில் அறிமுகமாக தமன்னா பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அதன்பின் துளிதுளிதுளி மழையாய்.. என்று கார்த்திக்குடன் போட்ட ஆட்டத்தில் எல்லோருரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பின் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது 30. இவர் திருமணம் எப்போ என்று கேட்டால், அதுக்கு இப்ப என்ன அவசரம் என்று கேட்கிறாராம்.

ஸ்ருதிஹாசன் (Shurti hassan) :


நம்ம உலக நாயகன் பொண்ணே தான். இந்த பயபுள்ளக்கு இப்ப 34 வயதாச்சு. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அந்த பொண்ணு என்ன பண்ணும் பாவம். அதுவும் காதலிக்கறன்னு யாரையாவது கூட்டடிக்கிட்டு தான் வருது. ஆனா எங்க. ஒன்று அப்பா பிஸியா இருக்கார். இல்ல அந்த பையன் வேற பிஸியாகிடுறான். மறுபடியும் அம்மணி தனி மரமாகிடுது.

தபு (Tabu) :


முரட்டு சிங்கிள்னா அது தபுவுக்கு தாம்ப்பா பக்காவா பொருந்தும். இவருக்கு இப்போது 48 வயதாகிவிட்டது. ஆனால் திருமணம் செய்து கொள்ளப்போவதோ, காதலிப்பதோ தனக்கு செட்டே ஆகாது. நான் அந்த மாதிரி ஆளே இல்லன்னு ரொம்ப பிடிவாதமாவே இருக்காங்க.

கீர்த்தி சுரேஷ் (Keerti suresh) :


கொஞ்சம் குழந்தைத்தனமும் கொஞ்சம் மெச்சூரிட்டியும் சேர்ந்த முகம் இவருக்கு. இவருக்கு இபப் தான் 27 வயதாகுது. அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றி ஐடியா எதுவும் இல்லையாம். இவருக்குப் பின்னால் சர்ச்சைகள், கிசுகிசுக்களும் பெரிதாக இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

கேத்ரினா தெரஸா (Cathrina terasa) :


என்னங்க இந்த பொண்ண அடையாளம் தெரியலயா? இதுதாங்க நம்ம மெட்ராஸ் பட கதாநாயகி கலையரசி. ஆமாங்க. பேஸிக்கா இவங்க ஒரு மலையாளி. படிச்சதெல்லாம் பெங்களூரு. தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். மெட்ராஸ் படத்துக்கு பிறகு இவரை பெரிதாக பார்க்க முடியாவிட்டாலும் கடம்பன், கணிதன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன் இப்படி கணிசமாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவருக்கு வயது முப்பதை தொட்டு விட்டது.
மக்களே இப்படி லிஸ்ட் வந்துகிட்டே இருக்கு, போதும் இதோட முடிச்சிக்குவோம்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *