அஜித்தால் அசந்த போனி கபூர் :
சென்னை: போனிகபூர் நிறுவனம் தயாரித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நம்ம தல நடித்து வர்றார்..இது தெரிஞ்ச விஷயம்தான். படம் ஏறக்குறைய முடியும் தருவாயில் படத்தின் டீசரைப் பார்த்த போனி கபூர் அசந்து போயிட்டாராம். அஜீத் பத்தி தெரியும்…ஆனா மனுஷன் இவ்வளவு டெடிகேஷனான்னு புல்லரிச்சு போயிட்டாராம்.
படத்தின் விலையில் எந்த மாற்றமும் செய்வதற்கில்லை என்பதிலும் மிக மிக தெளிவாகப் பேசி, தனது உறுதிப்பாட்டை நிலை நாட்டி வருகிறார்னும் சொல்றாங்க. அஜீத்துக்கு வியாழக் கிழமை ராசி என்பதால், படத்தை வியாழக் கிழமை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் தரப்பு கோரிக்கை வச்சாலும்… அதெல்லாம் முடியாது என்றும் மிக உறுதியாக மறுக்கிறாராம். அஜீத் இதைப் பற்றி எதுவும் கண்டுக்கலை என்றாலும் ,படத்தை ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி சனிக் கிழமைதான் வெளியிடுவேன்னு உறுதியா சொல்றார் போனி கபூர். அவருக்கு சனிக் கிழமை ராசியாம்…இரண்டு நாள் வசூல் பாதிக்கும் என்றால்…அதை எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு தைரியமும் சொல்லி வருகிறார் என்றும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம்காரணம் அந்த டீசரைப் பார்த்தது மட்டும்தான் என்கிறார்கள். அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒவ்வொரு புதுப்புது விஷயங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் போதும்…நம்ம தல படத்தைப் பார்க்க ஆகஸ்டு மாதம் வரை காத்திருக்க வேண்டுமே என்று ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். என்ன செய்வது ஆக்கப் பொறுத்தவங்க ஆற பொறுத்துத்தான் ஆக வேண்டும்…