இந்தியாவின் புனிதநதிகள் மற்றும், காவிரி நதி பிறந்ததற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்ன தெரியுமா ? – Tamil Viral News

இந்தியாவின் புனிதநதிகள் மற்றும், காவிரி நதி பிறந்ததற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்ன தெரியுமா ?

இந்து புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் பாயும் ஒவ்வோர் நதியும் கடவுளுடன் தொடர்புடையதாகும். அவர்களின் உருவத்தை ஆராயும்போது அனைத்து நதிகளும் பெண் உருவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள், நடை, உடை அனைத்தும் பெண்மையை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
புராணங்களில் கூறியுள்ளபடி இந்தியாவில் மொத்தம் ஏழு புனித நதிகள் பாய்ந்து இயற்கையை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அவை கங்கை, யமுனை, சரஸ்வதா, நர்மதா, கோதாவரி, காவிரி மட்டும் சிந்து ஆகும். இதில் தென்னிந்தியாவில் பிறக்கும் ஒரே நதி காவிரி ஆகும். காவிரி பிறப்பிற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிந்து நதி :


ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாக இருந்த சிந்தி இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இப்போது பாகிஸ்தான் வழியாக பாய்கிறது. இதனால் இதற்கு பதிலாக கிருஷ்ணா நதி புண்ணிய நதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
நதிகள் எதை குறிக்கிறது ?
இந்த ஒவ்வொரு நதிக்கும் ஒரு குணம் இருக்கிறது. கங்கை தூய்மை அல்லது மோட்சத்தை குறிக்கிறது, கிருஷ்ணரை போற நீல நிறத்தில் இருக்கும் யமுனை காதலை குறிக்கிறது, சரஸ்வதி நதி அறிவாற்றலை குறிக்கிறது, நர்மதை நதி வைராக்கியத்தை குறிக்கிறது, கோதாவரி பக்தியை குறிக்கிறது, காவிரி ஞானத்தை குறிக்கிறது, கிருஷ்ணா நதி தைரியத்தை குறிக்கிறது.

தக்ஷிணா கங்கை : இந்து மதத்தில் காவிரி நதி தக்ஷிணா கங்கை அல்லது தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதியின் பிறப்பு பற்றி பல கதைகள் உள்ளது. அதில் மிகவும் நம்பத்தகுந்த ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ள காவிரியின் பிறப்பை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.

பாற்கடல் :

 

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு உலகத்தை காப்பாற்ற அழகிய பெண் உருவமான மோகினி அவதாரத்தை எடுத்தார். அப்போது அவருக்கு உதவியாக அவரின் துணைவியான லக்ஷ்மி லோபமுத்ரா என்னும் பெண்ணையும் அவருடன் அனுப்பி வைத்தார். அவர் வந்த வேலை முடிந்த பிறகு அவர் பிரம்மகிரி மலையில் பாறையாக மாறிவிட்டார்.

பஞ்சம் : முனிவர் ஒருவரின் சாபத்தால் தெற்குப்பகுதி மிகவும் வறட்சியாகவும், மழையின்றி வறண்ட பூமியாகவும் மாறியது. இயற்கை உயிரோடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் அந்த பகுதியில் இல்லை. இவை அனைத்தையும் மலையின் உச்சியில் கரும்பாறையாக இருந்த லோபமுத்ரா பார்த்து கொண்டுதான் இருந்தார்.

மன்னர் காவேரன் : இன்னொரு புறத்தில் அரசர் காவேரன் குழந்தை இல்லாமல் தவித்து வந்தார் அதனால் அவர் பிரம்ம தேவரிடம் ஆசீர்வாதம் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டார். அதனால் பிரம்மகிரி மலைக்கு சென்று பிரம்மாவின் அருளை பெற காவேரன் சென்றார்.

பிரம்மாவின் ஆசீர்வாதம் : காவேரனின் பக்தியால் மகிழ்ந்த பிரம்மா அவர் எந்த அழகிய பொருளை தொடுகிறாரோ அது அவரின் குழந்தையாக மாறும் என்று வரம் வழங்கினார். பிரம்மாவின் வரத்தால் மகிழ்ந்த காவேரன் தன் அரண்மனைக்கு திரும்பினார். வரும் வழியில் கால் இடறிய காவேரன் லோபமுத்ரா இருந்த பாறையை தாங்கிக்கொள்ள பிடித்துவிட்டார்.
காவிரியாக மாறிய லோபமுத்ரா : அந்த பாறை தன்னை மாற்றிக்கொண்டது, ஆனால் நதியாக அல்ல அழகிய பெண்ணாக மாற்றிக்கொண்டது. தனக்கு மகள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த காவேரன் தன் மகளுக்கு காவேரி என்று பெயர் சூட்டினார். அவர் மனித வடிவத்தின் நீர் வெளிப்பாடு என்பதாகும்.

சப்த ரிஷி அகத்தியர் : ஒருநாள் சப்த ரிஷி அகத்தியர் காவேரனை அணுகி காவேரியை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டார். காவிரியை பற்றிய அனைத்து உண்மைகளையும் அகத்தியர் முன்பே அறிந்து வைத்திருந்தார். அவரின் கமண்டலத்தில் இருந்து கொள்ள அவர் சம்மதித்தார் ஆனால் அவரின் ஒரே நிபந்தனை என்னவெனில் அகத்தியர் ஒருபோதும் அவரைதனியாக விட்டிவிடக்கூடாது என்பதாகும்.

காவிரி நதியின் பிறப்பு :


கூர்க் மலைப்பகுதியை அகத்தியர் அடைந்த போது வறண்ட மலைப்பகுதியில் காவிரி நதியின் பிறப்பிடத்தை தேர்வு செய்வதில் குழப்பமடைந்தார். எனவே தன்னை வழிநடத்தும் படி கடவுளிடம் அவர் வேண்டினார். அவருக்கு உதவுவதற்காக காகத்தின் வடிவில் வந்த விநாயகர் சரியான இடத்தில் கமண்டலத்தை தள்ளிவிட்டு காவிரி வெளியே வர காரணமாக அமைந்தார்.

காவிரியின் வாக்கு : காவிரி பல ஆண்டுகளாக அந்த மலை மற்றும் பள்ளத்தாக்கில் பரந்து விரிந்து ஓடியது. ஒருநாள் அகத்திய முனிவர் பிராயச்சித்தம் தேடுவதற்காக மலை உச்சிக்கு சென்றார். தனது சிந்தனைகளில் மூழ்கிய அகத்தியர் காவிரியை விட்டு சென்றார்.

சத்தியம் மீறல் : தனக்கு கொடுக்கப்பட்ட வாக்கு மீறப்பட்டதை உணர்ந்த காவிரி தனது போக்கை மாற்றி கொண்டார். மலையில் இருந்து இறங்கி தலைக்காவிரியை அடைந்து பாகமண்டலாவில் மீண்டும் எழ பாய்ந்தார் என்று கூறப்டுகிறது.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *