கட்டுமஸ்தான அழகான உடலைப்பெற எவற்றை உண்ணவேண்டும் தெரியுமா? – Tamil Viral News

கட்டுமஸ்தான அழகான உடலைப்பெற எவற்றை உண்ணவேண்டும் தெரியுமா?

பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள்.
அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. உடலை அழகாக மெருகேற்ற போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது. இப்போது அழகான உடல் கட்டமைப்பைப் பெறுவதற்கு எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட வேண்டுமென்று பார்ப்போம்.

ஓட்ஸ் கஞ்சி : ஓட்ஸ் கஞ்சியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை குறைக்கும். மேலும் இது உடம்பில் உட்சேர்க்கைக்குரிய (anabolic) செய்முறையை அதிகரித்து, சிதைமாற்றம் (catabolism) மற்றும் கொழுப்பு தேங்குதலை குறைக்கிறது.

மோர் : மோர், புரதச்சத்து அதிகமுள்ள பானமாகும். உடற்பயிற்சி செய்த பின் மோரை குடித்தால், உடலானது புரதச்சத்தை உடனே உறிஞ்சிக் கொள்ளும். இதனால் அதிகப்படியான புரதச்சத்தை பெறலாம். மேலும் கெட்டியான மோர் அல்லது தண்ணீர் கலந்த மோரை பருகினால், உடம்பின் ஆற்றல் அதிகரிக்கும்.

முட்டை : உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டைகளை சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

பாலாடைக்கட்டி : உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய் :


வைட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து, போலேட் (folate) மற்றும் அர்ஜினைன் (arginine) போன்றவை நிறைந்தது தான் நிலக்கடலை வெண்ணெய். இதை அளவாக எடுத்துக் கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.

நண்டு : நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கடல் சிப்பிகள் :


கடல் சிப்பிகளில், உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பாலுணர்வூட்டியாகவும் விளங்குகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

வாழைப்பழம் : உடலை ஏற்றுபவர்கள் பலரும் அதிகப்படியாக சாப்பிடுவது வாழைப்பழத்தை தான். இதில் ட்ரிப்டோபைன் நிறைந்திருப்பதால், இது செரோடோனின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, நரம்புகளை சாந்தப்படுத்தும். மேலும் இதில் உணவு கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கும் மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கும்.

மிளகாய் : 

உணவில் மிளகாய் சேர்ப்பதனால், உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை இது தடுக்கும். மிளகாயில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு :

சர்க்கரைவள்ளி கிழங்குகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்து உள்ளது. இதிலுள்ள சர்க்கரை ஆக்கத்திறன் மற்றும் தாங்கு திறனை அதிகரிக்க செய்யும்.

அத்திப்பழம் :

 

இரும்பு போல உடலை வளர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத்தின் (Alkali) அளவை சமநிலையோடு வைத்துக் கொள்ளலாம்.

காளான் :

காளான் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது.

தினை : சாதத்திற்கு இணையான உணவாக விளங்குகிறது தினை. இதில் அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது.

இறைச்சி : ஆட்டு இறைச்சியில் அதிகமான அளவில் விலங்கின புரதம் இருக்கிறது. மேலும் இதில் அர்ஜினைன் (arginine) மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

டோஃபு (tofu) :

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபுவில், அதிக அளவு அமினோ அமிலம் மற்றும் ஐசோ ஃப்ளேவோனாய்டுகள் இருப்பதால், இதனை சாப்பிட, உடற்பயிற்சி செய்யும் பொழுது தசைகள் வேகமாக வளர உதவி செய்கிறது.

பருப்பு வகைகள் :

சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வளமையான புரதச்சத்து, அதிமுக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சால்மன் மீன் : சால்மன் மீனில் அதிக அளவு மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் அழற்சியை தடுக்கும் குணங்கள் அடங்கியிருப்பதால், உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவதற்கு சிறந்த உணவாகும்.

அன்னாசிப்பழம் : அன்னாசிப்பழம் என்பது இயற்கை ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இது நோய்த்தொற்றுகள் வராமல் தடுத்து, தசை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

டார்க் சாக்லெட் :

அளவாக டார்க் சாக்லெட் சாப்பிடுவதால், உடம்பில் அழற்சி ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.மேலும் ஃப்ளேவோனாய்டுகளின் அளவு அதிகமாக இருப்பதால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், உடலின் மெட்டபாலிசமும் மேம்படும்.

தயிர் : தயிரில் காம்ப்ளக்ஸ் சுகர், அமினோ அமிலம் மற்றும் கரையக்கூடிய புரோட்டீன்கள் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இந்த உணவுப் பொருள் உடலின் மெட்டபாலிசத்தை ஆரோக்கியமாக வைத்து உடலை மேம்படுத்தும்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *