மீன ராசியினரின் குணம் மற்றும் காதல் தெரிஞ்சுக்கணுமா…. – Tamil Viral News

மீன ராசியினரின் குணம் மற்றும் காதல் தெரிஞ்சுக்கணுமா….

மீன ராசிக்கான பொதுவான குண நலன்கள் :
மீன ராசிக்காரர்களின் சிறப்பான குணம் என்னவென்றால் எந்த செயலுக்கும் அது கடினம் என்று சொல்லே அவர்களிடம் கிடையாது. செயல்களை செய்வதில் எப்பொழுதும் வித்தியாசமாகவும், நல்ல புத்தி கூர்மையானதாகவும் இருப்பர். தனக்கு, தனக்கு என்று அனைத்தையும் எடுத்து வைப்பவர்.
ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மீன ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.

காதல் : மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் கலந்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலை அதிகமாக இருக்கும். எப்பொழுதும் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.

நற்குணங்களை கொண்டவர் மற்றும், இவர்கள் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக்காரர்கள் யோசித்து எல்லா விஷயங்களின் முடிவெடுப்பதில் சிறந்தவர். மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் இவர்களுக்கு நண்பராக இருப்பர். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசி காரர்களிடம் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் பழகுபவர்.
அனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

திருமண வாழ்க்கை : இவர்களின் இல்லற வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
மீன ராசிக்காரர்கள் நல்ல மனப்பக்குவத்தை கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் யாரை நண்பனாக்கிக் கொள்கின்றனரோ, அவர்கள் மிகவும் பாக்கியசாலி. இவர்களின் நற்குணம் மிகுந்தவர்.

ராசிக்கல் : மீன ராசிக்கு ராசியான கல் புஷ்பராகம் கோமேதகம்.
இவர்களுக்கு சங்கடங்கள் நேரும் சமயத்தில் புஷ்பராகம், கோமேதகம் அல்லது முத்தை மோதிரமாக அணிந்து கொள்ளுதல் அல்லது பக்கத்தில் வைத்துக் கொண்டாலும் துன்பங்கள் விலகும்.
வியாழக்கிழமை அன்று தங்கத்தில் அல்லது செம்பில் மோதிரம் ஆகி 3 அல்லது 4 ரத்தினங்களை பதித்து கடவுளை வேண்டி ஆட்காட்டி விரலில் அணிய வேண்டும். அவர்களுக்கு கோமேதகம் மற்றும் புஷ்பராகம் கற்கள் நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட எண் : அதிர்ஷ்ட மான எண் 3 மற்றும் 7 மற்ற எண்கள். இதன் கூட்டு எண்களான 3, 12, 21, 30, 48, 57, 66, 75. மற்ற எண் 7 எண் கூட்டு எண்களாக 7, 16, 25, 34, 43, 52, 61, 70 இவை யாவும் சுபம் தரும் எண்கள் ஆகும்.
இது மட்டுமல்லாமல் 1, 2, 9 சுபம் தரும் 1 2 9 சுபம் தரும். 4, 8 சமம். 5 6 நன்மையைத் தராது. இவற்றில் சுகம் தரும் என்னை கொண்டு வியாபாரம் செய்தால் நன்மை தரும்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *