விஜய் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள் : தளபதி 63 அதிரடி அப்டேட் ! – Tamil Viral News

விஜய் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள் : தளபதி 63 அதிரடி அப்டேட் !

அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் 3ஆவது படம் தளபதி63. தற்காலிகமாக தளபதி63 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என்று இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஒரு காட்சியில் அப்பாவும் மகனும் ஒரே காட்சியில் இணைந்து நடிக்க இருக்கின்றனராம். கில்லி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் விளையாட்டு கதையில் விஜய் நடித்துள்ளார். அதுவும், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார்.
கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ள தளபதி63 படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் 2ஆவது லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற முக்கியமான ஒரு அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், வில்லு படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய்யின் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ஏஞ்சல் என்று கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதோடு, இப்படத்தை விநியோகமும் ஏஜிஎஸ் நிறுவனமே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், டேனியல் பாலாஜி, இந்துஜா ரவிச்சந்திரன், ரெபா மோனிகா ஜான், வர்ஷா போலம்மா, யோகி பாபு, சௌந்தரராஜன், பாடகர் பூவையார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்த நிலையில், இப்படம் குறித்து இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21ம் தேதி மாலை 5.59 மணிதான் தளபதி63 பயன்படுத்த கடைசி நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அன்று மாலை 6 மணிக்கு தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும், 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 2ஆவது லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *