145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை….. – Tamil Viral News

145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை…..

மலேசியா பத்துமலை முருகனுக்கு போட்டியாக, சேலம் வாழப்பாடி அருகே 145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி வேகமாக நடைப்பெற்று வருகின்றது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது பத்துமலை குகை கோயில். இதன் நுழைவு வாயிலில் உலகிலேயே உயர்மான, அதாவது மொத்தம் (பீடத்துடன் சேர்த்து) 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடியில் முருகன் சிலை : இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பத்துமலை முருகனை விட உயரமாக அதாவது 145 உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

முருகன் சிலை மட்டும் 126 அடி உயரம் + 19 அடி உயர பீடம் என 145 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த உயரமான சிலை அடுத்தாண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை, மலேசியா, பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டு வருகிகின்றது.சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இந்த சிலை அமைக்கப்பட்டு வருவதால், அதன் பிரமாண்டத்தைப் பார்க்க இப்பொழுதே பக்தர்களும், பயணிகளூம் இங்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

சுற்றுலா தலமாகும்: 
இந்த பிரமாண்டமான முருகன் சிலை உருவாக்கப்பட்டால், இந்த பகுதி பெரிய சுற்றுலாத் தலமாக வாய்ப்புள்ளது. இந்த பகுதி மிகவும் பிரபலமாகவும், பொருளாதார வளர்ச்சியும் பெறும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.இங்கு பாஜக.,வின் முக்கிய தலைவரான இல. கணேசன் சிறப்பு பூஜை செய்து பேட்டியும் அளித்துள்ளார்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *