உங்களுக்கு தெரியுமா? திருவண்ணாமலை அருகே 1500 ஆண்டுகள் பழமையான மூன்று சிலைகள் கண்டெடுப்பு ! – Tamil Viral News

உங்களுக்கு தெரியுமா? திருவண்ணாமலை அருகே 1500 ஆண்டுகள் பழமையான மூன்று சிலைகள் கண்டெடுப்பு !

திருவண்ணாமலை அருகே உள்ள தி.வலசை கிராமத்தில் முன் பல்லவர் காலத்தைச் சேர்ந்த, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
ஹைலைட்ஸ் : தி.வலசை கிராமத்தில் 5,6-ம் நூற்றாண்டின் முன் பல்லவர் காலத்தை சேர்ந்த மூன்று சிலைகள் கண்டெடுப்பு , குறிப்பாக தாமரை மலரில் நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை அரிதான ஒன்று.
திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தமிழ் தொல்லியல் மையத்தில் சார்பாக, தி.வலசை கிராமத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முருகன், கதிர் விநாயகர், லிங்கம் ஆகிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் ராஜவேலு கூறுகையில், முருகன் மற்றும் நான்கு கைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் 5,6-ம் நூற்றாண்டின் முன் பல்லவர் காலத்தை சேர்ந்தது. குறிப்பாக தாமரை மலரில் நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை அரிதான ஒன்று. ஆறுமுகங்களுடன் கூடிய சிலையான இது, மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. முருகன் சிலையில் மேல்புறம் மயில் மற்றும் சேவல் ஆகியவை காணப்படுகின்றன.

முருகனின் இடது கடரத்தில் வில்லானது பிடித்து வைத்திருப்பதன் மூலம், போருக்கு பின்னரான காட்சியாக இச்சிலையை வடிவமைத்து இருக்கிறார்கள். முருகனின் உடையலங்காரங்களை அப்போதையை உள்ளூர் வழக்கப்படி அமைத்திருக்கின்றனர். இடப்பக்கம் ஒரு சிறிய சேவகரின் சிலையும், பாதத்தின் கீழ் பகுதியில் தாமரை மொட்டுக்களும் காணப்படுகிறது. முருகன் சிலையில் வலது கீழ் புறத்தில் ஏழு வரிகளுடன் கூடிய சிறிய எழுத்துப்பகுதியும் இடம்பெற்றுள்ளது. அதை படிப்பதற்கு சிரமம் இருப்பதனால், கல்வெட்டியல் அறிஞர் ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் வந்தவுடன் விரைவில் அந்த செய்தியுடன், மேலும் சில விவரங்களும் தெரியவரும். மேலும் இதுகுறித்து விவரங்களை மாநில தொல்லியல் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தெரியப்படுத்த இருக்கிறோம். அப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. இதுதொடர்பாக தொல்லியல் துறையினர் முறையான ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல தகவல்கள் என்று தொல்லியல் அறிஞர் ராஜவேலு அவர் கூறினார்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *