ஏகே60 படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்…. – Tamil Viral News

ஏகே60 படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்….

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே60 படத்தில், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஆசை, காதல் கோட்டை, வாலி, தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழகத்தில் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டவர் அஜித் குமார். தற்போது அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் “நேர்கொண்ட பார்வை” படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு மாஸாக நடக்கின்றன. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து “நேர்கொண்ட பார்வை” படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 60-ஆவது படத்தையும் தானே தயாரிப்பதாகவும், அப்பட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் “தடக்” என்ற படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தற்போது அஜித் 60 படத்தின் மூலம் தமிழில் களமிறங்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப் படுகிறது.

மேலும் இப்படத்தையும் இயக்கப் போவது “நேர்கொண்ட பார்வை”யின் இயக்குனர் வினோத் தான் இப்படத்திற்கான் திரைக்கதை வேலைகள் முடிந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பட ஷீட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது. அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *