டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் இருந்த மூன்று கப்பல்கள்…. – Tamil Viral News

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் இருந்த மூன்று கப்பல்கள்….

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.

அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம், இந்த சாம்சன் கப்பல் போல.

அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.
இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.

மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் ‘எனக்கு வழிகாட்டு’ எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.
தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *