பேனா வெறும் அஃறிணைப்பொருள் இல்லை – அந்தநாள் நினைவலைகள்…. – Tamil Viral News

பேனா வெறும் அஃறிணைப்பொருள் இல்லை – அந்தநாள் நினைவலைகள்….

என்னைப்பொருத்தவரை நினைவுதெரிஞ்சநாள்லேருந்து,
கடைசிவரைக்கும் நம்மகூடப் பயணஞ்செய்யுறதுகள்ல பேனாவுக்கு முக்கியமானதோர் இடமிருக்கு, பேனாவை வெறும் அஃறிணைப்பொருளா என்னால பார்க்கமுடியுறதில்லை.
நமக்கு எழுதத்தெரிஞ்சநாள்லேருந்து எவ்வளவு விதவிதமானபேனாக்கள். கரும்பச்சையும் தங்கக்கலர் கொப்பியுமா ஹீரோப்பேனாவுலேர்ந்து, அமுக்குப்பேனாவுலேருந்து , மரப்பேனாவுலேருந்து… எத்தனை அடேங்கப்பா..

ஹீரோப்பேனாவை கழட்டி அதோட உள்வயித்துல மெல்லிசாவுள்ள ஸ்டீல்பட்டையை அமுக்குனபடியே இங்க்பாட்டில்ல பேனாவை முக்கியெடுத்து இங்க்கோட லெவல்பார்த்து, இங்க் கையிலபடாம பேனா மொனையை தலைலசேய்ச்சிக்கிறது ஒரு சந்தோஷம்.

இங்க்பேனாவுல எல்லாருக்கும் எழுதவராது. ஆனா எழுதப்பழகிட்டா எழுத்துங்க அவ்ளோ குண்ட குண்டாவரும்ல… ஆனா இங்க்பேனாவை பராமரிக்கிறது கொஞ்சம் ரிஸ்க்புடிச்சவேலை.
கொஞ்சம் அலட்சியமாயிருந்தாலும் ஜாமெண்ட்ரிபாக்ஸ்பூரா இங்க்கை ஒழுகவிட்டுருக்கும் இல்லனா, சட்டைப்பாக்கெட்ல நீலம்போட்டிருக்கும்.

சிலநேரங்கள்ல இங்க்பேனா சரியாயெழுதலைனா பேனாவோட முனையை பிளேடால கீறிவிடணும்.

அப்போ மரப்பேனா இருந்துச்சி, வழவழனு இருக்கும். சில மரப்பேனாக்கள்ல ஒருபக்கம் நீலம் இன்னொருபக்கம் செவப்புனு ரெண்டு ரீஃபில் இருக்கும். ஆனா மரப்பேனாவுல எழுதிட்டு விரலை மோந்துபாத்தா ஒரு வாடைவரும்ல… எனக்கு அந்த வாடை பிடிக்காது.
அப்புறம்,
ஒரேபேனாவுல நாலுரீஃபில்: நீலம்,கருப்பு,செவப்பு, பச்சைனு நாலுரீஃபிலுங்க. நாலுத்துக்கும் தனித்தனி அமுக்கிங்க. அப்போ ரொம்ப ஆச்சர்யப்படுத்துனபேனா அது, இப்போ கிட்டத்தட்ட காணமப்போய்ட்டுனு நெனைக்கிறேன்.

எவ்ளோபேனாவந்தாலும் ரெனால்ட்ஸ்பேனாவை அடிச்சிக்கமுடியாதுல்ல..!
அந்த பளீர்வெள்ளையும் பளபளப்பானநீலமும் செமகாம்பினேஷன்.
அதுலயே made in franceனு போட்டுவர்றபேனாவை ரீஃபில்மாத்த திறக்கமுடியாது.
பேனாமேல
045 REYNOLDS FINE CARBUREனு ப்ரிண்டானதுல சிலபசங்க அவங்க இனிஷியலை மட்டும் விட்டுட்டு மீதியெழுத்தையெல்லாம் பிளேடால சுரண்டிவச்சிருப்பாங்க.

சிலபேரு அவங்கபேரை ஒரு சின்னபேப்பர்ல எழுதி அழகா சுருட்டி
ரீஃபிலோடசேர்த்து உள்ள அனுப்பி நாம விரல்புடிச்சியெழுதுற எடத்துல செட்பண்ணிவச்சிருப்பாங்க… அடையாளத்துக்கு. ரெனால்ட்ஸ்லயே,
ரெனால்ட்ஸ் போல்டுனு ஒரு பேனா வந்துச்சி.

உடம்புமுழுக்க நீலகலர்ல. கொஞ்சம் மொத்தமாயெழுதும்.
ஆனா இங்க் கொட்டும். பரிட்சைத்தாள்ல அங்கங்க புள்ளிப்புள்ளியாத்தெரியும். புள்ளினுசொன்னதும் இன்னொன்னுஞாபகம்வருது. இந்தமாதிரி ரீஃபில்பேனாக்கள்ல தொடர்ந்தெழுதுறப்போ உள்ளங்கைல அந்த பேனாமுனைபட்டு உள்ளங்கைல
புள்ளிப்புள்ளியாத்தெரியும். பரிட்சையப்போ எழுதுற அவசரத்துல அதை கவனிக்கமாட்டோம்.
எழுதிமுடிச்சிட்டு வெளிலவந்து உள்ளங்கையப்பாத்தா ஆச்சரியமாயிருக்கும்.

செவப்பு இங்க்பேனாவுல ரெனால்ட்ஸ் கொஞ்சம் சோவகலர்ல எழுதும்.

எனக்கு நல்லா பளீர்செவப்பு இல்லன்னா ரோஸ்கலர்தான் ரொம்பப்பிடிக்கும்.
செவப்புகலருக்கு லோக்கல்பேனாதான் பெஸ்ட்டு. கிளாஸ்ல பரிட்சைப்பேப்பரை திருத்தித்தர்றப்போ நம்மபேப்பர்ல செவப்புக்கலர்ல எழுதி வட்டம்போட்ட மார்க்கை
பேப்பர் வாத்தியார்கையிலயிருக்கும்போதே பார்க்க அவ்ளோ ஆவலாயிருக்கும்ல.

பள்ளிக்காலத்துல, கூடப்படிக்கிறபசங்களோட அப்பாவோ மாமாவோ
பயணத்துலேருந்துவந்தா (இப்போதான் ஃபாரின்… அப்போலாம் பயணத்துக்குப்போயிருக்காங்க.னனுதான் சொல்றது.)
பசங்க கையில வெளிநாட்டுப்பேனாதான். முனைப்பகுதி பித்தளையால செய்யப்பட்டது,
சில்வர், கோல்டு, ராயல் பிளாக்..னு பலவிதப்பேனாக்கள்.

வெளிநாட்டுப்பேனாக்கள் பெரும்பாலும் நடுவுல திருகினா திறக்கும். ரிவர்ஸ்லதிருகினா மூடிக்கும். சின்னவயசுல ஒருவெளிநாட்டுப்பேனாவை வச்சிருந்தாலே அவ்ளோபெரியவிஷயம்.
அப்புறம் தொண்ணூறுகளோட பிற்பகுதில வாசனைப்பேனானு ஒன்னு வந்துச்சி. ரீபில்ல ஏதோ வாசனைக்கு கலந்திருப்பாங்க, எழுதயெழுத ரூமேவாசமடிக்கும். ஆனா எனக்கு அது தலைவலியெ கெளப்பிவிட்டுரும்.
இப்போ அந்த வாசனைப்பேனாலாம் மலையேறிட்டுனு நெனைக்கிறேன். அப்புறம், தீர்ந்துபோன ரீஃபிலை தரைல தேய்ச்சி ரீஃபில்முனைலவுள்ள பால்ட்ரெஸ்ஸை எடுக்குறது, ரெனால்ட்ஸ்பேனாமூடியை விரலிருக்குலவச்சி கைதட்டி கொப்பில நீட்டிக்கிட்டுருக்குற பகுதி பட்டுனு ஒடக்கிறது,

கொப்பியோட அடிப்பாகத்துல பிளேடால ஓட்டைபோட்டு மேல்பாகத்துமேல ஒரு எலந்தக்கொட்டையைவச்சி அடிலேருந்து ஊதினா அந்த எலந்தக்கொட்டை கொப்பிமேல டச்பண்ணாம சுத்தவைக்குறதுனு பேனாவோட பழகுன காலம் அது.

இப்போகூட ஸ்டேஷனரிகடைங்களுக்குப்போனா
அங்க மாட்டியிருக்குற விதவிதமானபேனாக்களையெல்லாம்
அப்டியே அள்ளிட்டுவந்துடணும்னு ஆசைவரும். எனக்கு ரொம்பப்பிடிச்ச பரிசுப்பொருள் பேனாதான். (கொடுக்கவும் வாங்கவும்)

கால் ரூவாய்க்கு ரீஃபில்வாங்க ரீஃபில்பின்னாடி ஈர்க்கங்குச்சியசொருகி பெரியபேனாவுக்கு ஏத்தமாதிரியான ரீஃபிலாக்கி எழுதுனதுலேருந்து, ரொம்பகாஸ்ட்லினு சொல்லப்படுற பார்க்கர்வரைக்கும் பார்த்தாச்சி. ஆனா பேனாக்கள்மீதானகாதல் சலிக்கவேயில்லை.

வாழ்க்கையோட்டத்துல சிலபேருக்கு பேனாவோட பயன்பாடு
குறைஞ்சிபோயிருக்கலாம்; சிலபேருக்கு வருஷத்துக்கு ஒருபேனா..ன்றதே போதும்னு ஆகியிருக்கலாம்.

ஆனாலும், நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல பள்ளிக்கூட அத்தியாயத்துல பேனாக்கள் மீதானகாதலை எதுகொண்டும் மாத்தமுடியாது இல்லையா..?

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *