உங்கள் உடலில் இருக்கும் அம்சங்கள் உங்களின் குணங்களை பற்றி நிறைய சொல்லும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நம்முடைய முடி கூட நம்முடைய குணங்களை பற்றியும், நம்முடைய ஆளுமையை பற்றியும் கூறும் என்பது உங்களுக்கு தெரியுமா?. முடி நமக்கு அழகை மட்டும் வழங்குவதில்லை நமக்கான ஆளுமையையும் வழங்குகிறது.
பெண்களுக்கு முடி என்பது அவர்களின் உடலின் ஒரு முக்கியமான அங்கமாகும்.
இது அவர்களை பற்றி பல உண்மைகளைக் கூறும். அவர்களின் முடியின் வடிவம் அவர்களின் தைரியம், அழகு, தன்னம்பிக்கை போன்றவற்றின் அடையாளமாக இருக்கும். இந்த பதிவில் பெண்களை முடியின் வடிவம், அவர்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
குறுகிய முடி இருந்தால்:
ஒரு பெண் நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் கவனமாக வெட்டப்பட்ட குறுகிய சிகை அலங்காரம் இருந்தால், அவர்கள் கலைத்திறன் உடையவர்கள் என்பதையும், தங்கள் தலைமுடி மூலம் தன்னை வெளிப்படுத்த விரும்புவதையும் உணர்த்தும். உயர் பராமரிப்பு கொண்ட சிகை அலங்காரம் செல்வத்தின் அடையாளமாகும். இவர்கள் மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
நீண்ட முடி இருந்தால்:
நீளமான கூந்தலுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. பல பெண்கள் நீண்ட கூந்தல் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் இதன் மற்றொரு அர்த்தம் அவர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்பவர்களாக இருப்பார்கள்.
நரை முடி:
இயற்கையாக வரும் நரை முடியை மறைக்க விரும்பாத பெண்கள் அவர்கள் யார் என்பதில் உறுதியாக இருப்பார்கள். எது அழகு, எது பிடித்தது, மற்றும் நல்லது என்பதும் குறித்து அவர்களுக்கு என சொந்த கருத்துக்கள் இருக்கும்.
பல வண்ண முடி: இந்த வகையான முடி வைத்திருப்பவர்கள் மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்களாக இருப்பார்கள். இளமைப்பருவத்தில் இப்படி முடி வைத்திருப்பவர்கள் சாகசங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள், ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேலும் வைத்திருப்பவர்கள் சமூகத்தின் மீது அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள்.
சுருள் முடி:
சுருள் முடி கொண்ட பெண்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும், மற்றவர்களை விட வேலையை விரைவில் முடிப்பவர்களாகவும் இருப்பார்கள். காதல், பொறுமை, உள்ளுணர்வு, கோபம் என அனைத்திலும் இவர்கள் நெருப்பி போல இருப்பார்கள். அதேசமயம் இவர்கள் நாடகம் போட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
அலை அலையான முடி இருந்தால்:
இதற்கு அதிக பராமரிப்புத் தேவை. நீங்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இவர்கள் தனித்துவமானவர்கள், இந்த வகை கூந்தல் கொண்டவர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். மற்றவர்கள் இவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் இவர்களுக்கு அதீத மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொதுவாக இவர்கள் முகத்தை அப்பாவி போல வைத்துக் கொள்வார்கள்.