திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா? வழிபட்டால் என்ன நடக்கும்? – Tamil Viral News

திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா? வழிபட்டால் என்ன நடக்கும்?

இந்து மத வழிபாடுகள் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தவையாகும்.
ஏனெனில் இங்கு கடவுள்கள் எவ்வளவு அதிகமோ அதைவிட வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அதிகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளது. அதில் இப்பொழுதும் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா என்பதுதான்.


இந்தியாவில் அனைத்து கடவுள்களும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் வழிபட படுகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.
இந்த பதிவில் பெண்கள்திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.

அனுமன்: ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார். சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக்கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஏன் அனுமதிக்கப்படவில்லை?
புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடும் முறை கொண்டுவரப்பட்டது.

அனுமன் உருவச்சிலை:
பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அங்கு அனுமனின் உருவச்சிலையை தொடமால் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காரணம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் அனுமன் பெண்கள் தன்னை தீண்டுவதை விரும்பமாட்டார்.
பாலினம் முக்கியமல்ல
கடவுள் வழிபாட்டை பொறுத்தவரையில் வழிபாட்டிற்கோ அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதற்கோ பாலினம் முக்கியமல்ல. ஆண், பெண் இருவருமே அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

வழிபட வேண்டிய கிழமை:
வாழ்க்கையில் பல தடைகளால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடுவது அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை போக்கும்.

 

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *