முதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை பற்றித்தெரியுமா? – Tamil Viral News

முதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை பற்றித்தெரியுமா?

மின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காது நரம்புகளில் சிறு அளவில் மின்சாரத்தை பாய்ச்சி நரம்பு மண்டலத்தை 55 விநாடிகளுக்கு மறுசமச்சீர் செய்யும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்து உள்ளனர். இந்த புதுமை சிகிச்சையானது நரம்பு மண்டலத்தையே புத்துணர்ச்சிப் படுத்துவதுடன், வயது முதுமையையும் தள்ளிப்போடுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.

மின் சமநிலை நரம்பு தூண்டல் (டி.வி. என்.எஸ்.-tVNS) என்று இந்த சிகிச்சை முறை அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடம்பில் மின்சாரம் செலுத்தினாலும் வலி இருக்காது. அந்த அளவுக்கு குறைந்த அளவில் மின்சார தூண்டல் காதில் உள்ள வாகஸ் எனும் சமநிலை நரம்பில் செய்யப்படுகிறது. மெல்லிய இந்த தீண்டலால் லேசான கூச்ச உணர்வு தான் ஏற்படும். எனவே இது காதுகூச்ச சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. அங்கிருந்து உடலின் மொத்த நரம்பு மண்டலத்திற்கும் மின் சமிக்ஞைகள் கடத்தப்படுகிறது. இதனால் நரம்பு மண்டலம் புத்துணர்வு பெறுகிறது. மனநிலையில் தெளிவு ஏற்படுவதுடன், நல்ல உறக்கமும் வருகிறதாம்.

இந்த சிகிச்சையால் வயது மூப்பு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.
மேலும் பல்வேறு நோய்களின் வளர்ச்சி நிலையும் தடுக்கப்படுகிறது. அதாவது வயதாவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, இதய நோய்கள் ஏற்படுவது, படிப்படியாக வளரும் இதர நோய்களின் வளர்ச்சி நிலையும் தடுத்து நிறுத்தப்படுகிறது. ஆய்வின்போது 55 வயதுக்கு மேற்பட்ட 29 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 15 நிமிட நேரம், 2 வாரத்திற்கு மின்தூண்டல் சிகிச்சை பெற்றனர். அவர்களின் உடலில் மேற்கண்ட மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்பட்டதும், அவர்கள் தெளிந்த மனநிலையுடன், நிம்மதியான உறக்கத்திற்கு உள்ளானதும் உறுதி செய்யப்பட்டது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் சிறந்த சமநிலையை உருவாக்கும் புதிய சிகிச்சையாக தங்கள் சிகிச்சை முறை மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *