இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களினால் ஒருவர் உலகப்புகழ் பெறுவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. வெளியே தெரியாத பல திறமைகளை சாதாரண மக்கள் இதன் மூலம் வெளிக்கொண்டு வருகின்றனர்.
அப்படியொரு சம்பவத்தினை தற்போது பார்க்கலாம். ஆம் ரயிலில் பிச்சை எடுக்க பாட்டுபாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள ரயில் ஒன்றில் ராணு மோண்டால் என்ற பெண் பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். இவரது குரல் லதா மங்கேஷ்கரின் குரல் போன்று இருந்ததால் பயணிகளை இவரது பாடல் ரசிக்க வைத்தது.
A women working Ranaghat station in West BengalWhat a voice, felt in love with this voice 😊#krishaandaszubu
Posted by BarpetaTown The place of peace on Sunday, July 28, 2019
பயணிகளில் ஒருவர் இந்தப் பெண் பாடியதை காணொளியாக எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளதையடுத்து, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்த தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பேட்டி எடுத்து அவரை தொலைக்காட்சியில் பாடவும் வைத்தது.
A women working Ranaghat station in West BengalWhat a voice, felt in love with this voice 😊#krishaandaszubu
Posted by BarpetaTown The place of peace on Sunday, July 28, 2019
இதனால் அவர் ஒரே நாளில் மீண்டும் உலகப் புகழ்பெற்ற நிலையில் பிரபல பாடகரும் இசையமைப் பாளருமான சங்கர் மகாதேவன் தான் இசையமைக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றில் அந்த பெண்ணுக்கு பாடல் ஒன்றை பாடும் வாய்ப்பை அளித்துள்ளார்.
மேலும் ஒரு சில பாலிவுட் இசையமைப்பாளர்களும் அந்த பெண்ணிற்கு பாட வாய்ப்பு அளிப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரயிலில் பிச்சை எடுப்பதற்காக பாடிக் கொண்டிருந்த பெண் தற்போது தொழில்முறை பாடகியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.