கடைசி ஆடி வெள்ளி… எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்……. – Tamil Viral News

கடைசி ஆடி வெள்ளி… எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்…….

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.


ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: புதிய தொழில் சம்பந்தமாக நீங்கள் இறங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழலே உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்: உங்களுடைய பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் நீங்கும். நண்பர்களின் மூலமாக உங்களுடைய வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய சக ஊழியர்களுடைய ஆதரவும் வழிகாட்டுதல்களும் உண்டாகும். விவசாயங்களில் ஈடுபடுவர்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்: உங்களுடைய உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் சாதகமற்ற சூழ்நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: உங்களுடைய அறச்செயல்களினால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்களுடைய மறைமுக எதிரிகள் யார் என்பதை அடையாளம் கணடுகொள்வீர்கள். உங்களுடைய தொழில் சார்ந்த பயணங்களினால் உங்களுக்குப் பொறுப்புகளும் உயர்வும் உண்டாகும். தொழில் கூட்டாளிகளால் தொழிலை அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்: உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூா் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வழக்குகளில் இருந்து வந்த இழுபறி நிலைகள் கொஞ்சம் குறைந்து சுமூகமான நிலைகள் ஏற்படும். உங்களுடைய தொழில் முயற்சிகளில் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர்களிடம் உரையாடுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கன்னி: நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். வேலையிலும் உங்களுக்கு சாதகமான சூழலே நிலவும். உங்களுடைய உடன் பிறப்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். செய்யும் செயல்களி்ல பலன்கள் கொஞ்சம் கால தாமதமாகவே கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் நற்பெயர் உண்டாகும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடி வரும். அயல்நாட்டுப் பயணங்களின் மூலம் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதரவினால் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் கொஞ்சம் ஆதரவாகச் செயல்படுவார்கள். தந்தையின் வழி உறவுகளால் சுப செய்திகள் உண்டாகும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் உண்டாகும்.

தனுசு: வீட்டில் பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வேலை செய்கின்ற இடத்தில் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்: உறவினர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கான முழு அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சொத்துக்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிாஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ஷ நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்: வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே உறவுகளில் நெருக்கம் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, லாபம் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள் தோன்றி மறையும். கால்நடைகளின் மூலம் தேவையற்ற விரயச் செலவுகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் கேளிக்கை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்புடைய பயணங்கள் உங்களுக்கு சாதகமான செய்திகளைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்: உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் ஏற்படும். உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பொதுக்கூட்டங்களில் பேசுகின்றவர்களுக்கு எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். மனதுக்கு நெருக்கமானவர்குளால் வீண் அலைச்சலும் பதட்டமும் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *