பெண்கள் அந்த மாதிரியான நேரத்தில் ஏன் காரமான உணவுகளை வெறித்தனமா சாப்பிடுகின்றார்கள் தெரியுமா? – Tamil Viral News

பெண்கள் அந்த மாதிரியான நேரத்தில் ஏன் காரமான உணவுகளை வெறித்தனமா சாப்பிடுகின்றார்கள் தெரியுமா?

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர்.

மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.
வலிக்கு காரணம் என்ன?
காலை உணவை தவிர்த்தல் தான் பிரச்சினைக்கு மூல காரணம். கட்டாயம் பெண்கள் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது.
எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

பாட்டி வைத்தியம்:
கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.

தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்களின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எப்படி?
கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும். இது சித்தர்கள் கூறும் இரகசியம். கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.
அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.

காரமான உணவுகள்:
தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களில் படும் வேதனைகளை போக்க பெண்கள் காரமான உணவுகளை சாப்பிடுவார்களாம். இது தவறான விடயம்.
மாதவிடாய் காலத்தில் காரமான உணவுகளை உட்கொண்டால், அது உடல் சூட்டை அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடுவதோடு, சரும அரிப்புக்கள் மற்றும் பருக்களையும் உண்டாக்கும்.

அதோடு இரைப்பை மற்றும் குடல் சுவற்றை பாதித்து, அசிடிட்டி, வலிமிக்க வயிற்றுப் பிடிப்புக்களையும் ஏற்படுத்தும். ஆகவே மாதவிடாய் காலத்தில் அதிக காரம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் அளவாக வேண்டுமானால் சாப்பிடுங்கள்….!

முக்கிய குறிப்பு:
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்காது மற்றும் பல பெண்களுக்கு இனிப்பு உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். சர்க்கரை உணவுகளை உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஏற்றஇறக்க மனநிலை மற்றும் டென்சனை உண்டாக்கும்.

இதற்கு மாற்றாக, நார்ச்சத்துள்ள பழங்களை சாலட்டுகளாக செய்து சாப்பிடலாம்.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *