சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று சர்க்கரை நோய்க்கு பல்வேறு இன்சுலின்களும், மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டன. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும்.
முதல் இன்சுலின் விலங்குகளிடமிருந்து பெறப்பட்டது, அதன் பின்னர் அது ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது விலங்கு தோற்றம் கொண்ட மருந்துகள் இனி பயன்படுத்தப்படாது, அவை மரபணு பொறியியல் ஹார்மோன் மற்றும் அடிப்படையில் புதிய இன்சுலின் ஒப்புமைகளால் மாற்றப்பட்டன.
இரண்டு வகையான இன்சுலின் மரபணு பொறியியலால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் எஸ்கெரிச்சியா கோலி அல்லது ஈஸ்ட் நுண்ணுயிரிகளை ஒருங்கிணைக்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது, அதன் பிறகு மருந்து பல சுத்திகரிப்புகளுக்கு உட்படுகிறது.
உணவு சாப்பிட்ட உடன் ரத்தத்தில் ஏறும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஆகும்.
அதிக சர்க்கரையினால் நினைவு இழந்த நிலையில் உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
6 மணி நேரம் செயல்படும். மிக விரைவாக செயலாற்றும் இன்சுலின் உடனே சர்க்கரையை குறைக்கும்.
தற்போது தானாகவே போட்டுக்கொள்ளக்கூடிய பேனா வடிவில் இன்சுலின் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை பாதுகாப்பாக அழித்துவிடவேண்டும். வெப்பத்தால் இன்சுலின் திறன் குறைந்துவிடும். ஆதலால், இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைக்கவும்.
சர்க்கரை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
லேசான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த காலை உணவுகளை உட்கொள்ளலாம்.
மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்.
இரவு தூங்க செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிடலாம்.
இரவு உணவிற்கு பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்யலாம்.
இரவில் கார்போஹைட்ரேட் குறைவான உணவை சாப்பிடலாம்.
காலை உணவை கட்டாயமாக தவிர்க்க கூடாது.
இரத்த சர்க்கரையை குறைக்க மேலும் சில வழிகள்:
கார்போஹைட்ரேட் அளவை குறைத்து உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
வெந்தயம்
இன்சுலின் சுரப்புக்கு இந்த உணவுகள் உதவும் என்று பட்டியலிட்டு கொடுத்தாலும் அதில் முதன்மை இடம் பெறுவது வெந்தயம். வெந்தயம் அளிக்கும் பலன் என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு இது அற்புதமானபலன்க ளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் நல்லது . அந்த வகையில் வெந்தயத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும் இந்த நார்ச்சத்து எளிதாக கரைகிறது.
உண்ணும் உணவின் ஜீரணத்தின் வேகத்தைக் குறைப்பதால் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுப்பதை குறைக்க செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே குறைக்க உதவி செய்கிறது.